8 நவ., 2018

மைத்திரி - மகிந்தவுக்கு கடும் நெருக்கடி

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் தமது தரப்பினருக்கு 130க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஆதரவு இருப்பதை நிரூபிக்க முடியும் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை கூறியுள்ளனர்.
பிரதியமைச்சர் பதவியில் இருந்து மனுஷ நாணயக்கார விலகி ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக தம்முடன் இணைந்துக்கொண்டுள்ளதாகவும் இனி வரும் நாட்களில் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ள அமைச்சர்கள் படிப்படியாக விலகி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அணியில் இணைந்துக்கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 130க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு ஆதரவாக உள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பான விடயம் குறித்து ஊடகங்களும் சரியான முறையில் செயற்பட வேண்டும்.
ஜனநாயகத்தை மதிக்கும் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் இன்னும் இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.