புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2019

அடுத்த ஜெனிவா தீர்மானத்தில் அரசமைப்பு நடைமுறைப்படுத்தலையும் உள்ளடக்க முயற்சி

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்­தில், புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டும் என்­ப­தை­யும் உள்­ள­டக்­க வேண்­டும் என்று தமி­ழர் தரப்­புக்­க­ளால் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

தீர்­மா­னத்­தைச் சமர்ப்­பிக்­கும் என்று நம்­பப்­ப­டும் கனடா, ஜேர்­மனி, பிரிட்­டன், மசி­டோ­னியா ஆகிய நாடு­களுடன் இது தொடர்­பில் பேச்­சுக்­கள் முன்­னெ­டுக்­கப்­பட் டுள்­ளன. அடுத்த மாத ஆரம்­பத்­தில் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் உறுப்பு நாடு­களை நேரில் சந்­தித்­துப் பேசு­ வ­தற்­கும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் 2015ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 30-1 தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. தீர்­மா­னத்­தின் பரிந்­து­ரை­களை இலங்கை முழு­மை­யாக நிறை­வேற்­றி­யி­ராத நிலை­யில் 2017ஆம் ஆண்டு 34-1 தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. 30-1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும் என்­பதே 34-1 தீர்­மா­னத்­தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இலங்கை மீதான இரண்டு ஆண்­டு­கள் கண்­கா­ணிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதத்­து­டன் முடி­வுக்கு வரு­கின்­றது. மேலும் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கண்­கா­ணிப்பை நீடிக்­கும் தீர்­மா­னம், எதிர்­வ­ரும் ஜெனிவா அமர்­வில் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

கடந்த காலத்­தில் அமெ­ரிக்கா இந்­தத் தீர்­மா­னங்­களை முன்­மொ­ழிந்­தி­ருந்­தது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வெளி­யே­றி­ய­தைத் தொடர்ந்து இந்த ஆண்டு இலங்கை தொடர்­பான தீர்­மா­னத்தை கனடா, ஜேர்­மனி, பிரிட்­டன், மசி­டோ­னியா ஆகிய நாடு­கள் சமர்ப்­பிக்­கும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

இந்த ஆண்டு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்­தில் 34-1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்ற விட­யம் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கும். அதற்கு மேல­தி­க­மாக சில விட­யங்­கள் தீர்­மா­னத்­தில் உள்­ள­டக்­க­வேண்­டும் என்று தமி­ழர் தரப்­புக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ளன. புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றம் முக்­கி­ய­மாக இணைக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ad

ad