புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2019

பிரெக்ஸிற் தொடர்பாக பிரித்தானியர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்! – கருத்துக்கணிப்பு

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய மக்கள் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது பிரதமர் தெரேசா மேயின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது.

எனவே, பிரதமர் மேயின் அரசாங்கம் புதிய திட்டத்துடன் வந்து உடன்பாடுகளை நிறைவேற்றும் பட்சத்தில் அனைவரையும் திருப்திப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்ய முடியாத ஒரு பணியாக இது இருக்கின்றது.

இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மேயின் உடன்பாடற்ற பிரெக்‌ஸிற் தொடர்பாக 432 வாக்குகள் எதிராகவும், 202 வாக்குகள் ஆதரவாகவும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் ஹவுஸ் ஒப் கொமன்ஸ் எனப்படும் பிரித்தானிய நாடாளுமன்றில் 1924 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசாங்கத்திற்கு கிடைத்த மாபெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது

ad

ad