25 ஜன., 2019

போதையை ஒழிப்போம்-மதுபானசாலையை அகற்றுவோம் கோரிக்கையை முன்வைத்து புங்குடுதீவு பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணி

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு வேலணை பிரதேச சபை உறுப்பினர்
கருணாகரன் நாவலனின் திட்டமிடலில் போதையை ஒழிப்போம் & தீவகத்திலுள்ள ஒரேயொரு மதுபான விற்பனை நிலையமாகிய புங்குடுதீவு மதுபானசாலையை அகற்றுவோம் எனும் தொனிப்பொருளில் புங்குடுதீவிலுள்ள பாடசாலை மாணவர்களால் கவனயீர்ப்பு பேரணி நடாத்தப்பட்டது . கணேச மகாவித்தியாலயம் , சித்திவிநாயகர் வித்தியாலயம் , அமெரிக்க மிஷன் ஆரம்ப பாடசாலை ,றோமன் கத்தோலிக்க ஆரம்ப படசாலை , சுப்பிரமணியம் மகளிர் வித்தியாலயம் , புங்குடுதீவு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் மேற்படி கவனயீர்ப்பு நிகழ்வினை முன்னெடுத்திருந்தனர் .
ஊர்காவற்துறை தலைமைப் பொலிஸ் நிலையம் மற்றும் புங்குடுதீவு உலக மையம் ( pungudutheevu world centre ) அனுசரணையோடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரணியில் புங்குடுதீவு கத்தோலிக்க பங்குத்தந்தை செபஜீவன் அடிகளார் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் , கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன் , ஊர்காவற்துறை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ( HQI ) விகும் வீரசேகர , குறிகாட்டுவான் பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் கலப்பான , மண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தராஜ் , புங்குடுதீவு உலக மைய தலைவர் பிள்ளைநாயகம் சதீஷ் , பொருளாளர் சபா . பரமேஸ்வரன் , சமூக ஆர்வலர் புங்கையூர் ராகுலன் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்டிருந்தனர் . இக்கவனயீர்ப்பு நடை பவனியானது புங்குடுதீவு கிழக்கு கணேச மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு புங்குடுதீவு மேற்கு சுப்பிரமணியம் மகளிர் வித்தியாலயத்தில் நிறைவுற்றது .தகவல் க.கு.நன்றி