25 ஜன., 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதைக் கண்டித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வாளர் அமைப்பால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அனுஷ்டிக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு, தமிழ் பிரதேசங்களிலுள்ள வர்த்தக சங்கங்கள், தனியார் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு வழங்கியிருந்தன.

இம்மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு சில மாணவர்கள் செல்லவில்லையென்பதுடன், அரச, தனியார் வங்கிகளும் முடங்கியிருந்தன. வர்த்தக நிலையங்கள், சந்தை ஆகியனவும் பூட்டப்பட்டனுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்பட்டது.

எனினும், சில அரச திணைக்களங்கள் திறக்கப்பட்டிருந்தமையைக் காண முடிந்தது.இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாத போதிலும், தூர பிரதேசத்துக்கான சில பஸ் சேவைகள் நடைபெற்றன.