புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஏப்., 2019

வாள், கத்திகளுடன் நீர்கொழும்பு பிரதி நகர முதல்வர் கைது

நீர்கொழும்பு நகர பிரதி முதல்வர் காவல் துறை அதிரடிப் படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நகர பிரதி முதல்வராகக் கடமையாற்றும் மொஹம்மட் அன்சார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரிடமிருந்து வாள், கத்தி மற்றும் கையடக்கத் தொலைபேசிக்கு பயன்டுத்தப்படும் மின்கலங்கள் 38 உடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் நீர்கொழும்பு காவல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது