27 ஏப்., 2019

வெள்ளவத்தையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது

சிறிலங்காவில் பதற்றம் அதிகரித்துச் செல்லும் நிலையில், இன்று
வெள்ளவத்தையில் ஒரு தொகை வெடி பொருட்களை எடுத்துச் சென்று கொண்டிருந்த மூன்று பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியில் ஒரு கிலோ கிராம் சி-4 என்ற வெடிபொருட்களை எடுத்துச் செல்லும் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.