27 ஏப்., 2019

வவுனியா நகர் பள்ளிவாசல் சூழலில் பதற்ற நிலை! இராணுவத்தினரால் கடும் சோதனை!

வவுனியா நகர் பள்ளிவாசல் சூழலில் பதற்ற நிலை! இராணுவத்தினரால் கடும் சோதனை!வவுனியா நகர் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் கடும் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதிகளில் வீதிகள் தடை செய்யப்பட்டு வாகனங்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சுற்றிவளைப்பு பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்கள் கடும் சோதனையின் பின் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இச்சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் வான் ஒன்று கைப்பற்றப்பட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையானது இரகசிய தகவல் ஒன்றையடுத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.