புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2019

நாட்டை பாதுகாக்க அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: யாழ். மேயர்

மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால்
மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் யாழ். மேயர் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் மற்றும் தீவிரவாதிகளின் செயற்பாடு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு சட்டம், மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காகவே அமுல்படுத்தப்படுகின்றது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆகையால் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது மக்கள் அதற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படக்கூடாது. மேலும் தமது அன்றாட செயற்பாடுகளையும் மிகவும் அவதானத்துடன் அனைத்து மக்களும் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று புராதான இடங்கள், சமய தளங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் புதிதாக யாரும் நடமாடுவார்களாயின் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது அரசியல்வாதிகள் ஆகியோருக்கு மக்கள் தகவல் வழங்க வேண்டும்” என யாழ். மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

ad

ad