புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 ஏப்., 2019

குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி

இஸ்லாமியத் தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ் மாநகர சபையில்
இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் அஞ்சலியின் போது தேசியக் கொடி மாகாணப் கொடி மற்றும் மாநகர கொடி என்பன அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு மூன்று நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு மொழுவர்த்தி கையில் ஏந்தியவாறு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்

மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்