11 மே, 2019

வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கு மக்களுக்கு 3 நாட்கள் காலக்கெடு

அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை உடமையில் வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி காலை 06 மணிக்கு முன்னதாக அவற்றை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அறிவிக்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.