புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 மே, 2019

சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, வாகனங்கள் சேதம்

கொழும்பு மாவட்டத்தில் இரு இடங்களில் சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன் இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. கடற்படைப் பேச்சாளர் இத்தகவலைத் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி முப்படையினரும் அப்பாவி மக்களின் அன்றாடச் செயற்பாடுகளை ஸ்தம்பிக்க வைக்கின்றனர் எனவும் இதுபோன்ற ஒரு சம்பவமே மேற்படி துப்பாக்கிச் சூடு எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் இன்று (11) சனிக்கிழமை வேகமாகச் சென்ற கார் ஒன்றை நிறுத்துமாறு கடற்படையினர் சைகை செய்தனர் எனவும் அவ்வாகனம் நிறுத்தப்படாமையால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். இதன்போது காரில் பயணித்த நபர் பலியானதாகவும் மற்றொருவர் காயமமடைந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிரிபத்கொட பிரதேசத்திலும் இதேபோன்றதொரு சம்பவத்தில் கடற்படையினரின் உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீதும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த வாகனம் சேதமடைந்தது எனவும் அதில் பயணித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.