புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 மே, 2019

கூட்டமைப்புடன் கைகோர்க்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணி!

தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இரண்டு கட்சிகளும் சந்தித்து, இது தொடர்பாக கலந்துரையாடியதாக, மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்து செயற்படுவதென இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த பேச்சுக்கள் ஆக்கபூர்வமானவையாக இருந்தன என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.