புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 மே, 2019

தூர சேவைகளில் ஈடுபடும் 4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் GPS தொழில்நுட்பத்தை அனைத்து தூர சேவை பஸ்களிலும் அறிமுகப்படுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாரதிகளின் ஒழுக்க விதிமுறைகளை பாதுகாத்தல் மற்றும் கவனயீனத்துடன் அதிக வேகத்தில் பயணிப்பதை தவிர்த்தலே இதன் நோக்கமாகும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க மல்லிமாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம், தூர சேவைகளில் ஈடுபடும் 4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.