புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2019

தியாகி திலீபன் படம்: மூடப்படும் யாழ்.பல்கலை

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தியாகி திலீபனின் திருஉருவப்படத்தை காரணங்காட்டி அங்கு சிற்றுண்டிசாலை நடத்தும் பொதுமகன் ஒருவர் கைதரியுள்ளார்.அதேவேளை விஞ்ஞான ஆய்வு கூடத்தில் சமுதாய மருத்துவ கற்கைக்கென பேணப்பட்டவந்த மிதிவெடிகள், கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டதாக இராணுவம் கூறும் நிலையில் அவை கற்பித்தலுக்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட்ட மாதிரிகள் என தெரியவந்திருக்கின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர்.இதன் போது மருத்துவபீடத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ஜொனி மிதிவெடி மற்றும் கிளைமோர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் குண்டு செயலிழக்க வைக்கும் படைப்பிரிவினர் நடத்திய பரிசோதனையில் வெடிக்கும் தகவற்றவையெனக்கண்டறியப்பட்டமை அம்பலமாகியுள்ளது.

இதனடையே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று காலை 6.30 மணியளவில் பல்கலைக்கழக அதிகாரிகளின் அழைப்பின் பேரில் இலங்கை ராணுவம் பெரும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது . மாணவர் சங்க அலுவலகத்தில் தலைவர் அவர்களின் புகைப்படத்தை வைத்திருந்ததற்காக மாணவர் சங்கத்தின் தலைவர் செயலாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அத்துடன் மாவீரர் நினைவிடம், முள்ளிவாய்க்கால் நினைவு மற்றும் பொங்கு தமிழ் அறிவிப்பு நினைவுச்சின்னத்தின் புகைப்படங்களை ராணுவம் எடுத்து இருக்கிறது . அத்துடன் இந்த கட்டமைப்புகள் சட்டவிரோதமானது என்று கருத்து சொல்லி இருக்கிறார்கள்.



இந்த தேடல் நடவடிக்கைகள் அந்தந்த பல்கலைக் கழகங்களின் அழைப்பின் பேரில் வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு அனுமதி இல்லாத பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிகிறது .முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வரை கூட யாழ் பல்கலை கழகத்தை மூடி வைக்க கூட இலங்கை அரசு சிந்திக்க கூடும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ad

ad