4 மே, 2019

யாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு

யாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் துப்பாக்கி வேட்டுகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிது நேரம் இந்த துப்பாக்கி வேட்டுகள் வெடித்ததாகவும், அதன் சத்தங்களை நன்கு உணர முடிந்ததாகவும் அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

எனினும், துப்பாக்கி வேட்டுகள் நடத்தப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குறித்து அறிந்துகொள்வதற்கு யாழ். பொலிஸ் தலைமையகம் மற்றும் காங்கேசன்துறை படை தலைமையகத்தை தொடர்புகொண்ட போதிலும் அதனை உறுதியான தகவல்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இதேவேளை, குறித்த பகுதியிலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மாவை சுனாதிராஜாவின் வீடு அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.