புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 மே, 2019

பாழடைந்த வீட்டுக்குள் பாரிய வெடிச்சத்தம்

மன்னாா் நானாட்டான் - அச்சங்குளம் பகுதியில் நேற்று இரவ திடீரென வெடி சத்தம் கேட்டதால் கிராம மக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகியதுடன், பதற்றம் நிலவியது.

அச்சங்குளம் விளையாட்டு மைதானத்தின் அருகில் காணப்படும் பாழடைந்த வீடொன்றில் இருந்து வெடிச் சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக அச்சங்குளம் கடற்படையினர், முருங்கன் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பட்டாசு வீட்டுக்குள் வெடித்தபடியால் அழுத்தம் அதிகமாகி பெரும் சத்தம் கேட்டத எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறி்த்த இடத்தில் சிறு ஆணிகளும், போத்தல் துண்டங்களும் சிதறிக் கிடந்தன என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.