புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 மே, 2019

வற்றாப்பளைக்கு குண்டு கொண்டு சென்றனராம்?

வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு குண்டு கொண்டு சென்றதாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொதுமக்கள் சிலரை இலங்ஐ காவல்துறையின் பளை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல் திருவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்பது தொடர்பில் காவல்துறையுடன் முரண்பட்டுள்ளனர்.இதனையடுத்து வாகனத்தில் பயணித்தோருக்கும் இலங்கை காவல்துறைக்குமிடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் பின்னர் குறித்த வாகனத்தில் குண்டுகள் இருந்ததாக தெரிவித்து காவல்துறை கைது செய்துள்ளது.

எனினும் இலங்கை காவல்துறையே வைத்து விட்டு குண்டு வைத்திருந்ததாக சோடிக்கப்பட்ட பொய்க்குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஐவரையும் கைது செய்ததாக குடும்பத்தினர் காவல்துறை மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியவர்களது வீடுகள் வல்வெட்டித்துறையில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.யுத்த காலங்களில் ஆட்களை சுட்டுக்கொன்ற பின்னர் இவ்வாறாக குண்டுகள் வைத்து கதைகள் சோடிக்கப்படுவது தெரிந்ததே.