புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 மே, 2019

தோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்!

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் 681வது படை தலைமையகத்துக்கு அருகில் உள்ள காணியில் இன்று நீதிமன்ற அனுமதியுடன் நீதியாளர் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் காவல்துறையினருடன் அகழ்வுப் பணி இடம்பெற்றது.

மண்டையோடு சிதைவடைந்தநிலையில் காணப்பட்ட குறித்த உடலத்தில் இரண்டு குண்டுகள் , துருப்பிடித்த துப்பாக்கிரவைகள் , வோக்கி டோக்கி ஒன்றின் சிதைவுகள், இலக்கத்தகடுகள்,சயினைட் குப்பி  ஆகியனவும் மீட்க்கப்ட்டன.
கண்டுப்பிடிக்கப்பட்ட  இலக்கதகட்டில் த.வி.பு புலனாய்வுப் பிரிவின் ஐ 2719 என்ற இலக்கம் காணப்படுகின்றமை குடிப்பிடத்தக்கது.

மீட்க்கப்பட்ட உடலத்தின் எச்சங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழி ஒன்று தோண்டப்பட்ட போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.