28 மே, 2019

கொழும்பில் தாக்குதல் நடத்தத் திட்டம்

சிறீலங்காவில் கொழும்பின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இராணுவத்தினர் கொழும்பின் பல பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பல இடங்களை இலக்கு வைத்த 88 வரைபடங்கள், 106 இராணுவ உடைகள், இரண்டு சவுதி அரேபிய அடையாள அட்டைகள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல் திட்டம் கிடைத்த முதல் சந்தர்ப்ப்பம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அருகில் வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.