28 மே, 2019

வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் நான்கு இஷ்லாமியர்களை பிடித்து படையினரிடம் ஒப்படைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் உள்ள இனிப்பெட்டிவெளி எனும் இடத்தில் உள்ள வாவியை அண்டிய வயல் பிரதேசத்தில் உலாவிய நான்கு முஷ்லிம் நபர்களை இன்று 28/05/2019 மு.ப 10, மணிக்கு அங்கு கண்ணுற்ற இளைஞர்கள் சந்தேகத்தில் பிடித்துள்ளனர்.

அவர்கள் ஏன்அங்கு வந்தனர் எந்த இடத்தில் இருந்து வந்தனர் என்பதை மாறுபட்ட விதமாக ஒவ்வொருவரும் கருத்துக்களை தெரிவித்தமையால் சந்தேகத்தின் பெயரில் வெல்லாவெளி பகுதியில் உள்ள படையினரிடம் ஒப்படைத்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக படையினர் முகாமுக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.