11 ஜூலை, 2019

மாங்குளத்தில் கோர விபத்து- இரு இளைஞர்கள் பலி

முல்லைத்தீவு, மாங்குளம் - துணுக்காய் வீதியில் வடகாடு பகுதியில் நேற்று மாலை 6.50 அளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
முல்லைத்தீவு, மாங்குளம் - துணுக்காய் வீதியில் வடகாடு பகுதியில் நேற்று மாலை 6.50 அளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

மாங்குளத்தில் இருந்து பாலிநகர் நோக்கி கப் ரக வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள், வடகாடு பகுதியில் வீதி திருத்தப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பாரிய குழி ஒன்றை விலத்தி செல்ல முற்பட்ட வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில், சம்பவ இடத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பாலிநகர், வவுனிக்குளத்தை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர்களான குணாளன் டிஷாந்தன் மற்றும் ஜீவகுமார் ஜினுசன் ஆகிய இருவரே உயிரிழந்தனர்