புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2019

மயானத்தையும் விட்டு வைக்காத சிங்களவர்கள்! - வவுனியாவில் தொடரும் ஆக்கிரமிப்பு

வவுனியா- சிதம்பரபுரத்தில் நான்கு கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்தினை சிங்கள மக்கள் தமக்குரியது என உரிமை கோருவதால் சர்ச்சை எழுந்துள்ளது. வவுனியாவின் எல்லையோர கிராமமான சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது மயானம் கற்குளம் படிவம் 1, 2 சிதம்பரபுரம், சிதம்பரநகர் கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பயன்படுத்தி வந்தனர்.

மயானத்தில் தமது கிராமத்தில் இறந்தவர்களை புதைத்தமைக்கான நினைவுக்கற்களையும் நாட்டியுள்ளனர். தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த பொது மயானத்திற்கு அண்மையாக, சிங்கள மக்கள் காணிகளை அடாத்தாக பிடித்து குடியேறி வருகின்றனர். நேற்றுமுன்தினம் பொது மயானத்தினை அப்பகுதி தமிழ் மக்கள் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சிங்கள மக்கள் குறித்த காணி தமக்குரியது எனவும் துப்பரவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்திருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று குறித்த பகுதிக்கு வருகை தந்த சிங்களவரான பிரதேசசபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த காணியில் எவ்வித வேலைகளையும் செய்ய வேண்டாம் எனவும் இவ்விடயம் தொடர்பாக பிரதேசசபையில் கலந்துரையாட வேண்டியுள்ளதால் இன்று தமிழ் கிராமத்தவர்கள் சார்பில் தமது பிரதேசசபைக்கு வருமாறு தெரிவித்து சென்றிருந்ததாகவும் கூறினர்.

குறித்த மயானம் தொடர்பான விடயம் பெரும் முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளது

ad

ad