புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஆக., 2019

வெள்ளைவான் கடத்தல்:வெல்கம பரபரப்பு வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சி காலத்தில் தன்னையும் வெள்ளை வானில் கடத்திச்செல்ல திட்டமிட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைத்தளம் ஒன்றில் இயங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நேர்காணலில் அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

தற்போதைய எதிர்கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தில் குமார வெல்கம எம்.பி அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

இருப்பினும் தற்போது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கடுமையாக எதிர்க்கும் குமார வெல்கம, தாம் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கின்றார்