புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஆக., 2019

சம்பளத்துக்கு ஆப்பு வைக்கும் டெனீஸ்வரன்

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் அமைச்சர்கள் அனந்தி சசிதரன் மற்றும் சிவனேசன் ஆகியோர் எடுத்த சம்பளங்களும் கொடுப்பனவுகளும் மாகாண திறைசேரிக்கு செல்ல ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நீதிமன்ற தீர்ப்பின் படி 2017ஆம் ஆண்டு ஆவணி மாதம் 20 ஆம் திகதி முதல் ஒரு சட்டவலுவற்ற அமைச்சர் வாரியத்தை முன்னாள் முதலமைச்சர் கொண்டு நடத்தியுள்ளார். சட்டவலுவற்ற அமைச்சர் வாரியத்தைச் சேர்ந்த முதலமைச்சரும், அனந்தி சசிதரன், சிவனேசன் ஆகியோர் எவ்வாறு அமைச்சர் சம்பளத்தை பெற முடியும்.

அடுத்த கட்ட நடவடிக்கையில் நான் இறங்க இருக்கின்றேன். ஒரு வலுவற்ற அமைச்சரவை சம்பளத்தை எடுக்க உரித்தற்றவர்கள். எடுத்திருக்கின்ற சம்பளம் மற்றும் அனைத்து கொடுப்பனவுகளும் மாகாண திறைசேரிக்கு செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கையை ஆளுநர் எடுக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்