புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 ஆக., 2019

சிறிதரன் வீடு படையினரால் சோதனை

கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டை இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனையிட்டு வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிறிதரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டை இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனையிட்டு வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிறிதரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளிற்காக கொழும்பில் நான் இருக்கின்ற வேளையில்- மறைத்து வைக்கப் பட்டிருக்கின்ற ஆயுதங்களை தேடுகின்றோம் என தெரிவித்து படையினரும் பொலிஸாரும் எனது வீட்டில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிழையான தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.இதனால் எனது உயிருக்கு ஆபத்து. இந்த விடயத்தில் சபாநாயகர் தலையிட்டு தனது சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் என சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையடுத்து, இந்த விடயம் குறித்து கவனத்தில் எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவிடம் சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.