புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 ஆக., 2019

வெளியார் தலையிட முடியாது-இலங்கை வெளிவிவகார அமைச்சு

இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடைய விவகாரம், அதில் வெளிச்சக்திகள் தலையிடக் கூடாது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடைய விவகாரம், அதில் வெளிச்சக்திகள் தலையிடக் கூடாது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இன்று அறிக்கை வெளியிட்ட விவகார அமைச்சு, இந்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம். நாட்டின் இறையாண்மையின் அடிப்படையிலானது. தேவையற்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் பொதுச் சேவை பதவியுயர்வுத் தீர்மானங்கள் மற்றும் உள்ளக நிர்வாக செயன்முறைகளை பாதிக்கும் வகையிலான சர்வதேசத்தின் முயற்சிகள் தேவையற்றவையும் ஏற்றுக்கொள்ள முடியாதவையுமாகும்.அத்தோடு சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் இயற்கை நீதிக்கு முரணானது “என்றும் கூறப்பட்டுள்ளது.