புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2019

அனந்திக்கு எதிராக அவதூறு வழக்கு

தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவதூறு ஏற்படுத்தினார் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார், வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன். முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புத் தொடர்பில், இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'வெலிஓயா பகுதியில் உள்ள குளம் ஒன்றில், மீன்குஞ்சு விடப்பட்டமையில் மோசடி இடம்பெற்றதாகவும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைளின் போதும் பஸ் தரிப்பிடம் அமைக்கும் போதும் மோசடி இடம்பெற்றதாகவும், மாவீரர், போராளிகளுக்கான வேலைத்திட்டத்தில் ஊழல் நடந்ததாககவும் குறிப்பிட்டு, அனந்தி சசிதரன் தனக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

இவற்றுக்கு எல்லாம் தான் விசாரணைக் குழுவில் சரியான விளக்கம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், மாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளில், ஒரு ரூபாய் என்றாலும் தான் எடுத்தேன் என்று நிரூபித்தால், தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் கூறினார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி அந்த நிதிப் பிரமாணங்களுக்கு அமைய, வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஊடாகவே செலவு செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், இவை எல்லாவற்றுக்கும் தான் சரியாக பதில் அளித்தப் பின்னரும் தனக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுகளை சுமத்திய உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் கூறினார்.

அனந்தி சசிதரன் செய்த முறைப்பாடு பொய் என்பதை விசாரணைக் குழு தெரிவித்துள்ளதாகவும் இந்நிலையில், அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பில் அனந்தி சசிதரனுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.

ad

ad