புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 ஆக., 2019

தமிழக பெண்களிடம் கமல்ஹாசனுக்கு அரசியல் மரியாதை சுத்தமாக இல்லை

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமலஹசனுக்கு பெண்கள் மத்தியில் மரியாதை சுத்தமாக இல்லையென அரசியல் கட்சிகளின் வெற்றிகளுக்காக ஆய்வு செய்து தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனமான ஐபேக்நிறுவன தலைவர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார் என தமிகழ செய்திகள் தெரிவிக்கின்றது.

‘நான்கு சதவிகிதமாக இருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் வாக்கு வங்கியை 40 சதவிகிதமாக மாற்றுவதே என் இலக்கு’எனக் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ள போதிலும் பெண்கள் வாகுகள்கமலஹசனுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்றுள்ளார்.

ஏற்கனவே அவர் வகுத்த திட்டத்தின் அடிப்படையில் தான் இந்திய பிரதமராக மோடியை இரு முறை உட்கார வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இருந்து தற்போது அதிமுக சார்பிலும் பிரஷாந்த் கிஷோரை சந்துள்ளனர், அதற்கு அதிமுக இரட்டை தலைமை இருக்கும்வரை வளராது என்று கூறியுள்ளார்.

அதைப்போல மக்கள் நீதி மய்ய தலைவர் கமஹசனனும் அவரை அணுகியுள்ளார், கமல் பிக்போஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் முக்கிய நிர்வாகிகள் போய் சந்தித்துள்ளனர்,

அப்போது தமிழக பெண்களிடம் கமல்ஹாசனுக்கு அரசியல் மரியாதை சுத்தமாக இல்லை என்று கூறியதால் நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்த்யுள்ளது.

நடிகராக இருக்கும்போதே கமலஹாசன் மீது பல சர்ச்சை விமர்சனங்கள் உண்டு,இப்போது அரசியல்வாதியாகிய பின்பும், மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் பிக்போஸ் நிகழ்ச்சி செய்வதால் நடுத்தர குடும்பங்கள் மத்தியில் கமலின் மீது இருக்கும் மதிப்பும் குறைந்துள்ளது என்று கட்சியினர் பேசிக்கொள்கின்றனர்,

அதேவேளை வேலூர் தேர்தலையும் கமலஹாசன் புறக்கணித்திருப்பது அவர் தனது சொந்த விருப்பங்களினாலே என்று கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது