புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2019

வரலாறு தெரியாத நாமல்-மாவை

தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் எதுவும் செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறுவாராயின் அவருக்கு எமது வரலாறு தெரியவில்லை. அவர் ஒரு சின்ன பையன்,புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது நாடு பிளவுபடப் போகின்றது என அவருடைய அப்பா பாராளுமன்றத்தில் கொக்கரித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் எதுவும் செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறுவாராயின் அவருக்கு எமது வரலாறு தெரியவில்லை. அவர் ஒரு சின்ன பையன்,புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது நாடு பிளவுபடப் போகின்றது என அவருடைய அப்பா பாராளுமன்றத்தில் கொக்கரித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தாவது,

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட நாம் தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரை மக்களுக்காக போராடி வருகின்றோம். நாம் எமது நலன் சார்ந்து செயற்படவில்லை. மக்களின் காணிகள் விடுவிப்பு,அரசியல் கைதிகள் விடுவிப்பு,இனப்பிரச்சனைகான தீர்வு போன்றவற்றுக்காக போராடி வருகின்றோம்.

மிக முக்கியமாக தமிழ் மக்களின் மிக நீண்ட கால பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு தீர்வாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் நடைபெற்றது. ஆனால் இந்த சின்ன பையனின் தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாராளுமனறத்தில் நாடு பிளவு படப்போகின்றது என இதனை சிங்கள மக்கள் எதிர்க்க வேண்டும் என கொக்கரித்தார். அதுமட்டுமல்லாது சிங்கள மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் செய்தார்.

நாட்டில் ஓர் தேர்தல் வரப்போகின்றது என்றவுடன் வடக்கிற்கு வந்து மக்கள் மத்தியில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகின்றார். வரலாறு தெரியாதவர்களின் இந்த கருத்துக்களை மக்கள் நன்கு அறிவார்கள். வரலாறு தெரியாத இவ்வாறான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்பான பதிலை அவர்கள் வழங்கத் தயாரா?பாதிப்படைந்த வடக்கு கிழக்கு மண்ணை மீள கட்டியெழுப்பப்படவில்லை, மக்களின் காணிகளை விடுவிக்கவில்லை இவற்றை செய்ய மறுத்த இவர்கள் இப்போது தேர்தல் நாடகம் ஆடுகின்றனர்' என்றார்.

ad

ad