புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 நவ., 2019

நவம்பர் 15 அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக, வாக்களிப்பு நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் அதற்கு முன்தினமான வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நவம்பர் 15 ஆம் திகதியன்று அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து பாடசாலைகளையும் மீள ஒப்படைக்கும் நிபந்தனைகளின் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியன்று பாடசாலை நேரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கவும் 16 ஆம் திகதியன்று வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக பாடசாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர தேர்தல் ஆணைக்குழுவுக்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.