புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 டிச., 2019

காலையில் நடந்த சோகம்; 16வயது கபொத மாணவன் பலி!

வவுனியா - சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்ற விபத்தில் க.பொ.த சாதாரண தர மாணவன் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து சிதம்பரபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் (வயது-16) என்ற மாணவன் சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்