புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 டிச., 2019

உயிர்ப்புடன் உள்ள புலிகளின் சித்தாந்தம்!- எச்சரிக்கும் பாதுகாப்புச் செயலாளர்

விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடனேயே இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதிக்கு நேற்று சென்ற பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன அங்கு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

“கடந்த ஏப்ரல் 21 தாக்குதல்கள், மிக உயர் மட்டத்தில் பொறுப்புகளில் இருந்த நபர்களின் முழுமையான அலட்சியம் மற்றும் அறியாமை தவிர வேறு ஒன்றும் இல்லை. இது இஸ்லாம் மதத்தை தவறாக வழிநடத்திய ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

இஸ்லாம், பெரும் நற்பண்புகளைக் கொண்ட ஒரு மதமாக இருப்பதுடன், ஒருபோதும் அப்பாவி பொதுமக்களைக் கொலை செய்வதை ஆதரிக்கவில்லை. இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், தேசத்தின் பாதுகாவலர்களாகிய நாங்கள் இத்தகைய வன்முறைகளை மீண்டும் செய்ய அனுமதிக்கக்கூடாது, நாடு பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டாலும், விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.