புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 டிச., 2019

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலை மூடிமறைக்க முற்படும் பாதுகாப்பு செயலர்

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்பு பின்னணி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்றல் கமல் குணரெத்னா அப்பட்டமான பொய்யை பரப்புகிறார்

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பன்னிப்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் -

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று தேசிய பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார். இதனால், தற்போது சில பொய்யான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுகின்றன. மறுபுறத்தில், மீண்டும் விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்கும் செயற்பாடுகளும் தமிழ் புலம் பெயர் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நிதி கூட திரட்டப்படுகின்றன. இதன் ஓர் அங்கமாகத்தான் சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் அந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி இலங்கைப் பிரஜையாவார். இலங்கைப் பிரஜையொருவருக்கு பாதுகாப்பை வழங்குவது அடிப்படை உரிமையாகும். இதனை பாதுகாப்புத் தரப்பினர் நிச்சயமாக மேற்கொள்ள வேண்டும். அந்தவகையில், இலங்கைப் பிரஜையொருவருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என முறைப்பாடொன்று அளிக்கப்பட்டால், அதுதொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது எமது கடமையாகும்.

ஆனால், சுவிஸ் தூதரகம் எமக்கான ஒத்துழைப்பை வழங்கவில்லை. குற்றப்புலனாய்வுத் திணைக்கம்தான் அனைத்து விடயங்களையும் கண்டுபிடித்தது” என மேலும் தெரிவித்தார்.