புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2019

ஜதேகவுடன் நிரந்தர கூட்டிற்கு வருகின்றது கூட்டமைப்பு!


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஊர்காவற்துறையில் உள்ள கட்சி அலுவலகத்தில்; ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இதேவேளை அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக இடங்களைப் பெறும் என்றும் சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அதன்படி, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் உரிமைகள் அதிகாரப் பகிர்வுக்கான ஒரு புதிய முறையை கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தயக்கம் காட்டாது என்றும் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து கொள்வதுடன் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி வந்திருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் கருத்து வெளியாகியுள்ளது.

ad

ad