செவ்வாய், டிசம்பர் 24, 2019

புறக்கோட்டை, பஸ்தியன் மாவத்தை சட்டவிரோத கடைகளை அகற்ற நடவடிக்கை!

கொழும்பு, புறக்கோட்டை, பஸ்தியன் மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, மின்சக்தி எரிசக்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புறக்கோட்டை, பஸ்தியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்திற்குச் சூழவுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுள்ள இக்கடைகளினால் பயணிகளுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும், இந்தக் கடைகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், பயணிகள் போக்குவரத்து அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, இக்கடைகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, அக்கடைகளை அங்கிருந்து அகற்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கட்டளையிட்டுள்ளார்.