புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2020

அடிதடியாக மாறிய ரெலோ மாநாடு; இருவர் கைது?

வவுனியாவில் நேற்று (16) இடம்பெற்ற ரெலோவின் 50வது ஆண்டு நிறைவு
விழா பொதுக் கூட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



நிகழ்வில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது மண்டப வாயிலுக்கு வந்த இளைஞர்கள் சிலர், ரெலோவின் கொடியை இறக்க முற்பட்டதாகவும் இதனையடுத்து அவர்களுக்கும் ரெலோ உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

ரெலோவின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் குகனுடைய படத்தை ஏன் காட்சிப்படுத்தவில்லை. யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தில் இரு இளைஞர்களை புளொட் அமைப்பினர் சுட்டுக்கொன்றிருந்தனர், தற்போது புளொட் தலைவர் சித்தார்த்தனை கூப்பிட்டு விழா செய்கிறீர்களா என அங்கு வந்த குறித்த இளைஞர்கள் தர்க்கம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சந்தர்ப்பத்தில் அங்கு ரெலோ உறுப்பினர்களும் குழுமியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பொலிஸாரின் துணையுடன் நிலைமையை கட்டுப்படுத்தியதுடன், தாக்கப்பட்டதாகக் கூறிய ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ரெலோவால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

ad

ad