புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 மார்., 2020

தமிழரசுக்கட்சி தேசியப்பட்டியல் இறுதி நிமிட மாற்றம் எப்படி  நடந்தது  ?
18 ம் திகதி தமிழரசு கட்சியின் தலைவர் மாவை , சுமந்திரன் , சரவணபவன் , சிறீதரன் , சித்தார்த்தன் மற்றும்  சிவஞானம் , நிர்வாகச்செயலாளர் குலநாயகம் மற்றும் ஏனைய அனைத்து வேட்பாளர்களின் முன்னிலையிலே
தேசியப்பட்டியல் பெயர் இடப்பட்டது . முதலாவது பெயராக தவராசாவும் , இரண்டாவதாக குலநாயகம் ( இவரது வீடு தான் கட்சி அலுவலகம் ) , மூன்றாவதாக குருகுலராஜாவின் ( முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர் ) பெயரும் இடப்பட்டது . அம்பிகாவின் பெயர் எங்குமிடப்படவில்லை . அன்று காலை எட்டு மணிக்கு கட்சி அலுவலத்திற்கு தனது தாயாரோடு வந்த அம்பிகா சுமந்திரனோடு ஊளையிட்டு அழுதவாறு சண்டை போட்டு சென்றிருந்தார்  . அப்போது கட்சி அலுவலகத்தில் முக்கியஸ்தர்கள் எவருமே இருந்திருக்கவில்லை அவரை தவிர . ஏகமனதாக தவராசாவின் பெயரே முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில் தனது மனைவியின் உடல் நிலை காரணமாக தவராசா கொழும்பு சென்றிருந்தார் . இந்நிலையில் தான் வழமையான சுமந்திரனின் நரித்தன  விளையாட்டு 19 ம்திகதி காலையில் மேற்கொள்ளப்பட்டு தேசியப்பட்டியல் பத்திரம் கச்சேரியில் வழங்கப்பட்டது . அம்பிகா  அவர்களுக்கு   செல்வாக்கு  இருக்குமானால்  முதலில் முடிவெடுக்கப்படடபடி   போட்டியிடும்  வேட்பாளர்  பட்டியலில்  வைத்திருக்கலாம்  என் அப்படி  செய்யவில்லை  என்பது இப்போது  புரியவருகிறது