புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 மார்., 2020

கொரோனாவால் இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி! பீதியில் உலக மக்கள்

ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 627 பேர் இத்தாலியில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவை விடவும் அதிகளவான உயிர்பலியினை இத்தாலி சந்தித்திருக்கிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் மட்டும் இத்தாலியில் 627 பேர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலகம் முழுவதும் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11,385 ஆக உயர்ந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 275,541 ஆக அதிகரித்திருக்கிறது.

இதேவேளை, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து ஒவ்வொரு நாடும் ஒற்றுமையுடனும் உறுதுணையாகவும் இருந்து எதிர்த்துப் போராட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது