புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2020

யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் போதகருக்கு கோரோனா! அவரது ஆராதனையில் பங்கேற்றவர்களிற்கு ஆளுநர் அவசர உத்தரவு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சுவிஸ் நாடு திரும்பிய பிலதெனியா தேவாலய போதகருக்கு கோரோனா வைரஸ் உறுதிப்படுத்திய நிலையில் அவரது ஆராதனையில் கலந்துகொண்டோரை அடையாளப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுள்ளார்.

இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தற்போது அவருக்கு கொறோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சுவிஸ் நாட்டில் சிகிச்சை பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆராதனையில் கலந்து கொண்ட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இவ் ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது.

ad

ad