புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 ஏப்., 2020

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்தியா ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியல்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியலை இந்தியா அனுமதி வழங்கி உள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியலை இந்தியா அனுமதி வழங்கி உள்ளது இதில் பக்கத்து நாடுகளுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. மொத்தம் 25 நாடுகளுக்கு இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் பாராசிட்டமால் சப்ளை செய்யவுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் 1.4 கோடி மாத்திரைகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) வழங்கப்போகும் முன்னுரிமை பட்டியலில் உள்ள 13 நாடுகளில் - அமெரிக்கா, 2 ஐரோப்பிய நாடுகள் - ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி, 2 தென் அமெரிக்க நாடுகள் - டொமினிகன் குடியரசு மற்றும் பிரேசில், மேற்கு ஆசியாவிலிருந்து ஒன்று, பஹ்ரைன் மற்றும் 5 அண்டை நாடுகளை உள்ளடக்கியது - இதில் நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்காள தேசம் அடங்கும்.

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தம்மு ரவி கூறியதாவது:-

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கு உலகளவில் அதிக தேவை உள்ளது. பல நாடுகள் இதனை கேட்ட கோரிக்கையை முன் வைத்துள்ளன, உள்நாட்டு தேவைகள் போக ஏற்றுமதி நோக்கங்களுக்காக உபரி மருந்தை வெளியிட அமைச்சரவை குழு முடிவு எடுத்தது. நாடுகளின் முதல் பட்டியல் அங்கீகரிக்கப்பட்டு தயாரிப்புகள் வெளியேறத் தொடங்கியுள்ளன, 2 வது பட்டியலும் பின்னர் 3 வது பட்டியலும் வெளியிடப்படும் எனகூறினார்.