புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2020

மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்பு?

மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்ப?நில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கை ஏப்ரல்- 30ந்தேதி மத்திய அரசு நீட்டிகிறது இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது

கடந்த 2-ம் தேதி ஒருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் இன்று 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனவும், நாடுதழுவிய ஊரடங்கு மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான மாநில முதல்வர்களின் பரிந்துரையை ஏற்று ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறும் போது

ஊரடங்கு விஷயத்தில் எந்த சமரசமும் கிடையாது என எங்களிடம் பிரதமர் மோடி கூறினார். மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைகள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார். எனவே 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக அடுத்த ஓரிரு தினங்களில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும் எனவும் எங்களிடம் பிரதமர் மோடி கூறியதாக கூறினார்.

ad

ad