புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 ஏப்., 2020

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகள் பட்டியல் வெளியீடு

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

வூகானில் இருக்கும் ஈரபதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தை விலங்குகளிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, எந்த விலங்குகளை இறைச்சிக்கு வளர்க்கலாம் என்ற வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இறைச்சிக்கு பன்றிகள், பசுக்கள், கோழிகள், ஆடுகள், மான்கள், தீக்கோழிகள், ஒட்டக இன அல்பாகா விலங்கு ஆகியவற்றை வளர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரி, கீரிப்பிள்ளை, காட்டு எலி ஆகியவற்றை வளர்க்கலாம், ஆனால் இறைச்சிக்கு பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவலுக்கு காரணமாக நம்பப்படும் எறும்பு தின்னி, வவ்வால்கள் போன்றவை பட்டியலில் இல்லை. அதேபோல் பட்டியலில் நாய் இனங்களும் இல்லை.