புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 ஏப்., 2020

ஒன்ராறியோ பாடசாலைகளை மே 4 வரை மூட முடிவு
ரொறன்டோவில் ஜூன் 30 வரை நிகழ்வுகளுக்கு தடை

கனடாவின் ரொறன்டோ நகரில் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை, நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ரொறன்டோ மேயர் ஜான் டோரி நேற்று அறிவித்துள்ளார்.
கனடாவின் ரொறன்டோ நகரில் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை, நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ரொறன்டோ மேயர் ஜான் டோரி நேற்று அறிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்று தொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர், "கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக, ரொறன்டோ நகரில் அனைத்து முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்கள், மாநாடுகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது, மேலும் வெளி குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முக்கிய நிகழ்வுகளுக்கான அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கனடா- ஒன்ராறியோவில் கொவிட் 19 தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மாகாண பாடசாலைகளை மே 4ஆமு் நாள் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஒன்ராறியோ பிரதமர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.
கனடா- ஒன்ராறியோவில் கொவிட் 19 தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மாகாண பாடசாலைகளை மே 4ஆமு் நாள் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஒன்ராறியோ பிரதமர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.

ஒன்ராறியோவில் கொவிட் 19 தொற்று தீவிரமடைந்ததை அடுத்து, ஏப்ரல் 4ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகளை மூட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. வரும் 6ஆம் திகதி மீள திறக்கவிருந்த பாடசாலைகளை மே 4ஆம் திகதி வரை மூடுவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மே 1ஆம் நாள் வரை பாடசாலைகளுக்கு வரத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றாரியோ மாகாணத்தில் இதுவரை 1966 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.