புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 ஏப்., 2020

யாழ். பெண் கொலையுடன் தொடர்புடையவர் ரொறன்டோவில் கைது!

கனடாவில் யாழ்ப்பாண பெண் சுட்டுக் கொல்லபபட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவை சேர்ந்த 28 வயதான Steadley Kerr என்பவரே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி Scarboroughவில் 38 வயதான தீபா சீவரத்னம், அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் போது தீபாவின் தாயார் பாரிய காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட தீபா சீவரட்னம் யாழ்ப்பாணம், வடமராட்சி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்தவராவார்.