புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2020

தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அதிலும் குறிப்பாக கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு கண்டி கம்பஹா களுத்துறை புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பு கண்டி கம்பஹா களுத்துறை புத்தளம் தவிர்ந்த யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் இன்று (20) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இதே நடைமுறை தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று முற்றாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆபத்தானது என பல தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் நேற்று அறிவிக்கப்பட்டது போன்று இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்காகவே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாகவும் மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி செயற்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக யாழில் கொரோனா அபாயம் இன்னும் நீங்கவில்லை. தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பலருக்கு இன்னும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சுகாதார நிறுவனங்களில் உள்ள சுகாதார ஊழியர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஊரடங்கு உத்தரவை குறைந்தது 7 நாட்களுக்கு நீடிக்குமாறு கேட்டுக் கொள்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதற்கு மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்புக்கள் கிளம்பி வருகின்றது. அதிலும் குறிப்பாக யாழில் ஊரடங்கு தளர்த்தப்படுவதால் பல தரப்பிலிருந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

எனவே அவர் அவரே அவர் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிதல் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுதல் போன்றவற்றை கடைப்பிடித்தலுடன் தேவையற்று வெளியில் நடமாடுதல் கூட்டம் கூடுதல் போன்ற விடயங்களை தவிர்க்க வேண்டும் என்பது அவசியமானது.

ad

ad