புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2020

கொரோனாவின் மரணப்பிடியில் பனியிலும் குளிரிலும் புலம் பெயர் உறவுகள்: சாராயக் கடைகளின் முன்பு வடகிழக்கு தமிழர்கள்

இன்று வடக்கு கிழக்கில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு காட்சி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

யாழ் குடாவிலும், அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் பிரதேசத்திலும் உள்ள சாராயக் கடைகளின் முன்னால் வரிசையாக மக்கள் நிற்கும் காட்சி கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட உடனேயே மக்கள் முன்னடித்துக்கொண்டு சாராயக் கடைகளின் முன்பு நிற்கின்ற காட்சி, அந்த மக்கள் பற்றி புலம்பெயர் மக்களுக்கு இருக்கின்ற அக்கறை, கவலை அத்தனையையும் சுக்குநூறாக உடைக்கும்படியாகவே இருக்கின்றது.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்கும் முடக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி வந்ததும், வடக்கிலும், கிழக்கிலும் எத்தனையோ இளைஞர்கள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்தபடி, வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் தமது உறவுகளைப் போசிக்கவேண்டும் என்று களம் இறங்கி இரவு பகலாக பணிசெய்து தமது பச்சாத்தாபத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

அதேபோன்று வடக்கு கிழக்கில் பட்டினிச் சாவில் எமது உறவுகள் மரணிக்கப்போகின்றார்கள் என்ற செய்தி கேட்டு, புல்பெயர் உறவுகள் துடித்தார்கள்.

பனியிலும், குளிரிலும் கடுமையாக உழைத்துச் சம்பாதித்த பணங்களை அங்குள்ள உறவுகளுக்காக அள்ளிக் கொட்டினார்கள். பல அமைப்புக்கள் புலம்பெயர் தேசங்களில் வீடு வீடாக ஏறி இறங்கி திட்டுவாங்கி பணம் சேர்த்து உறவுகளுக்கென்று அனுப்பி வைத்தன.

ஆனால் அந்த உறவுகள், அனைவரும் அக்கறைப்பட்ட அந்த தமிழ் உறவுகள், இன்று சாராயக் கடைகளின் முன்பு வரிசையாக நிற்கும் காட்சியானது – மனங்களை கனக்கச் செய்யும்படியாகவே இருக்கின்றது.



ad

ad