புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2020

கொரோனாவால் அதிக பலிகளை கொண்ட நாடாக மாறி வரும் பிரான்ஸ்! நேற்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா?


கொரோனா வைரஸால் நேற்று பிரான்சில் 642 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது அதிக உயிர்பலிகளை கொண்ட நாடாக மாறி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளான, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜேர்மனியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகளை அந்நாட்டு அரசு தடுத்து வருகிறது.

ஆனால் ஜேர்மனியுடன் ஒப்பிடும் போது, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றன.

பிரான்சில் நேற்று மட்டும் 642 பேர் புதிததாக உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,323-ஐ தொட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் அதிக பலிகளை கொண்ட நான்காவதாக நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது

ad

ad