புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2020

கோட்டாபயவின் அதிகாரம் குறித்து மொட்டுக்குள் குழப்பம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கின்ற பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைருக்கே சாரும் என தெரிவித்துள்ள சிறீலங்கா பொதுஜன முன்னணி, மாறாக சிறீலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் மாற்றுத் திகதியை நிர்யணிக்க அதிகாரம் கிடையாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திகதியை நிர்யணிக்கும் அதிகாரம் சிறீலங்கா அதிபருக்கு இருப்பதாக பொதுஜன முன்னணியில் ஒருசிலரும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே அந்த கடமை இருப்பதாக மறுசாராரும் கூறிவருகின்றனர். இதன் காரணமாக கட்சிக்குள் குழப்பமான நிலை உருவாகியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில், மாற்றுத் திகதியை நிர்ணயிப்பதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிகாரம் இருப்பதாக கடந்த 4ம் திகதி பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான சட்டத்தரணி உதய கம்மன்பில ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும் கண்டியில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கெஹலிய ரம்புக்வெல, தேர்தலுக்கான மாற்றுத் திகதியை நிர்ணயிப்பதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிகாரம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

ad

ad