புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2020

மே 11 என்பது உள்ளிருப்பின் இறுதிக்கான நிச்சயமான திகதியல்ல - உள்துறை அமைச்சர்! மே 11 - உடனடியாகப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்ட மாட்டாது - கல்வியமைச்சர்

எமானுவல் மக்ரோன் கூறியது போல் உடனடியாகப் பாடசாலைகளைத் திறக்க முடியாது. படிப்படியாக மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜுன் மாதத்திலேயே பெருமளவில் இந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனப் பிரான்சின் கல்வியமைச்சர் ஜோன்-மிசேல் புளோங்கே (Jean-Michel Blanquer) தெரிவித்தள்ளார்.
அதுவும் அத்தனை பாடசாலைகளையும் திறப்பதோ, அத்தனை மாணவர்களையும் உள்வாங்குவதோ முடியாத காரியம். முதலில் சிக்கலில் உள்ள, கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களையும், உள்ளிருப்புக் காலத்தில் கல்விக்கான இலத்திரனியல் உபகரணங்கள் இல்லாமையினால் பாடங்களைத் தொடர முடியாத மாணவர்களையே நான் முதலில் உள்வாங்க முயற்சிக்கின்றேன். அதுவே இப்போதைய எனது இலக்கு. சமூகச் சிக்கல்களின் அடிப்படையிலேயே முன்னுரிமை வழங்கப்படும். ஒரே வகுப்பில் அனைத்து மாணவர்களையும் உள்வாங்க முடியாது. சுகாதாரச் சூழ்நிலை இதற்கு இடம் தராது' எனக் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிற்கு மே 11 இற்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றித் தெரிவித்த எமானுவல் மக்ரோன், தனது அமைச்சர்களின் மூலம், மே 11 என்பது வெறும் அடையாளத் திகதியே என்பதை உணர்த்த முயல்கின்றார்.

"மே 11 என்பது ஒரு வெறும் இலக்காக மட்டுமே வைக்கப்பட்ட திகதியாகும். உள்ளிருப்பைக் கடைப்பிடிப்பதில் காட்டும் நேர்மையும், நோய்க்கிருமியின் தாக்கமும் மட்டுமே இதனை முடிவு செய்யும்."
"மே 11 என்பது உள்ளிருப்பிலிருந்து வெளியேறும் திகதியல்ல. தற்போதைக்கு வழங்கப்பட்டள்ள உள்ளிருப்பின் எல்லைத் திகதியாகும். அதன் பிறகும் நோயோடு பேராடவேண்டுமானால் தொடர்ந்து போராடித்தான் ஆகவேண்டும்" எனவும் பிரான்சின் உள்துறை அமைச்சர் கிறிஸ்தொப் காஸ்தனே தெரிவித்துள்ளார்.
மக்கள் தொடர்ந்தும் உள்ளிருப்பைக் கடைப்பிடித்து நோயின் பரவலைத் தடுத்தேயாக வேண்டும். காவற்துறையினர் மேற்கொண்ட 11.8 மில்லியன் சோதனைகளில், 704.000 பேர், உள்ளிருப்பை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர் எனவும் உள்துறை அமைச்சர் அடிக்கோடிட்டுள்ளார்.
எமானுவல் மக்ரோன் மென்மையான மொழிகளில் கூறியதை, உள்துறை அமைச்சர் கள யதார்தத்துடனும், கடுமையுடனும், உள்ளிருப்பு மேலும் நீடிக்கலாம் என்ற தொனியிலும் கூறியுள்ளார்

ad

ad